பஞ்சாப் மாநிலத்தில் சேலம் தாப்ரியின் பீரு பண்டா பகுதியில் பழைய பொருள்கள் வைத்திருக்கும் ஸ்கிராப் குடோன் ஒன்று உள்ளது. இங்கு திடீரென தீ வீபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. எந்தவிதமான உயிர்சேதமும் இதுவரை ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் அதிகப்படியான வீடுகள் உள்ளதால், காவல் துறை தரப்பில் அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.