ETV Bharat / bharat

குழந்தைகள் மருத்துவமனையில் தீ - ஒரு குழந்தை பலி!

ஹைதராபாத்: எல்.பி நகர் பகுதியிலுள்ள ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததோடு மேலும் ஐந்து குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

Hyderabad
author img

By

Published : Oct 21, 2019, 11:06 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் பகுதியிலுள்ள ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று (அக். 20) மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தினால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.

மேலும் ஐந்து குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்துவிட்டு குழந்தைகளை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட ஷைன் குழந்தைகள் மருத்துவமனை

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 42 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து

Intro:Body:

-Fire breaks out at Hyderabad LB Nagar Shine Hospital

-One child died and four others injured in the accident.

-Police and firefighters Break the Glasses and saved patients in Hospital

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.