புவனேஸ்வர் (ஒடிசா): ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 'நிர்மால்யா' என்னும் பிரசாதம் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனம் நிர்மால்யா பிரசாதத்தை ஆன்லைனில் விற்றதாக கோயிலில் பணிபுரியும் சாம்புநாத் குன்டியா என்பவர், அந்நகரின் சிங்ஹாத்வார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
வர்த்தக லாபத்திற்காகப் பிரசாதத்தை ஆன்லைனில் விற்பனை செய்யும் அமேசானின் இச்செயல், கடவுள் ஜெகந்நாதரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக, அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சாம்புநாத், "பிரசாதத்தை ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்பாகக் கோயில் நிர்வாகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே நிர்மால்யா பிரசாதத்தை யார் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
கோயில் அல்லது வேறொரு இடத்தில் தயாரிக்கப்பட்டும் இந்த நிர்மால்யா, மக்களை ஏமாற்றும் வகையில் ஜெகந்நாதர் கோயில் பிரசாதம் எனக்கூறி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவ சிறப்பு அலுவலர்கள்: முன்மாதிரியான ஒடிசா அரசு