ETV Bharat / bharat

தவறான சிகிச்சையால் பெண் மரணம்: உறவினர்கள் சாலை மறியல் - புதுச்சேரியில் தவறான சிகிச்சை சாலை மறியல்

புதுச்சேரி: தனியார் கருத்தரித்தல் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால், இளம் பெண் உயிரிழந்தாகக் கூறி அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

death
death
author img

By

Published : Oct 22, 2020, 10:30 AM IST

புதுச்சேரி லாஸ்பேட்டை கொட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (24). ஜேசிபி ஆபரேட்டரான இவருக்கும் சென்னையை சேர்ந்த விஜயலட்சுமி (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன் விஜயலட்சுமி கர்ப்பமடைந்துள்ளார். அவருக்கு முதலில் அரசு மருத்துவமனையில் கர்ப்ப கால ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அவரை அவரது கணவர் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளார்.

அங்கு விஜயலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் வளரும் சிசுவை அகற்ற வேண்டும் இல்லையெனில், விஜயலட்சுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர். இதனால், மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என மூன்று மாத சிசுவை அகற்ற ஐயப்பன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் விஜயலட்சுமியின் வயிற்றில் இருந்த மூன்று மாத சிசுவை அகற்றி அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அப்போது, திடீரென விஜயலட்சுமிக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக அரசு கரோனா மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து விஜயலட்சுமியை புதுச்சேரி அரசு கரோனா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதனால் ஐயப்பன் தன் மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், மீண்டும் நேற்றய தினம் விஜயலட்சுமிக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் முன்பு சிகிச்சை பெற்று வந்த, அதே தனியார் கருத்தரிப்பு மருத்துவமனைக்கு ஐயப்பன் அழைத்துச் சென்று சிகிச்சைகாக அனுமதித்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமி கருத்தரிப்பு மருத்தவமனையில் உயிரிழந்துள்ளார். இதனைக்கண்ட, அவரின் கணவர் மற்றும் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் தனியார் கருத்தரித்தல் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால்தான் விஜயலட்சுமி உயிரிழந்தாகக் கூறி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தன்வந்திரி நகர் காவல் நிலைய காவலர்கள், மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, அவர்களை சாலை மறியலை கைவிட செய்து விஜயலட்சுமியின் உடலை புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.