நவீன சமூகத்தில் துரித உணவகம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. தெருவுக்கு ஒரு துரித உணவகம் அமைத்து மக்களின் வாழ்க்கையில் அது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், அது உடலுக்கு கேடு என மருத்துவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு செய்துவருகின்றனர்.
முக்கியமாக, குழந்தைகள் துரித உணவகத்தில் சாப்பிடுவதால் பெரிய அளவில் பாதிப்படைவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பள்ளி அருகே 50 மீட்டர் தொலைவில், துரித உணவகம் அமைப்பதற்கு மத்திய அரசு தடை விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக வாக்காளர் புகார்