ETV Bharat / bharat

வேளாண் மசோதா: கோரிக்கைகள் நிறைவேறும்வரை காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும்...! - காங்கிரஸ் எதிர்ப்பு

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்வரை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

farm-bills-row-congress-to-protest-till-demands-are-met

author img

By

Published : Sep 26, 2020, 6:47 AM IST

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த பாரத் பந்த்-ற்கு காங்கிரஸ் கட்சி சார்பாக ஆதரவளிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா கூறுகையில், '' இது முற்றிலும் நியாயமான எதிர்ப்பு. இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளை சுரண்டுவதற்கான வாய்ப்பை ஒன்றிய அரசு பெறும். எனவே இத்தனை ஆண்டுகளாக இந்திய விவசாயிகளுக்கு இருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

நாங்கள் விவசாயிகளுடன் நிற்கிறோம், இந்த மசோதாக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள்தான்.

ஒரு எம்எஸ்பி இருக்க வேண்டும் என்று நீங்கள் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்றால், விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தடுப்பது எது? ஒரு இந்திய விவசாயிகளின் சராசரியாக நிலம் 2 ஏக்கருக்கும் கீழ் உள்ளது. அத்தகைய விவசாயிகள் பெரிய நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர் என்று நினைக்கிறீர்களா?.

ஒரு நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டால் மேல்முறையீடு செய்ய நீங்கள் விவசாயிகளுக்கு 30 நாள்கள் அவகாசம் அளித்துள்ளீர்கள். ஆனால் பெரு நிறுவனங்களுக்கு 60 நாள்கள் அவகாசம் அளித்துள்ளீர்கள். அது எவ்வளவு பாரபட்சமானது?

இதனால் இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகவும், முதலாளிகளுக்கு ஆதரவானதாகவும் உள்ளது. இதுதான் ஒன்றிய பாஜக அரசின் உண்மையான நிறம். அது தற்போது அனைஅவருக்கும் அப்பட்டமாக தெரிகிறது.

இந்திய விவசாயிகளுக்கும், இந்திய விவசாயத்திற்கும் எதிரான மசோதாக்கள் தேவை இல்லாதது. விவசாயிகளின் மேல் அரசுக்கு அக்கறை இருந்தால், சிறு வணிக சந்தைகள் உருவாக்கியிருக்க வேண்டும்.

இந்த மசோதாக்களில் மாற்றம் கொண்டு வரப்படும் வரை, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

எம்எஸ்பி முறை நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் கூறுகிறார். இதே பிரதமர்தான் நாட்டில் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம், வருடத்திற்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள், கரோனாவுக்கு எதிரான 21 நாள் போர், பணமதிப்பிழப்பு என செய்தார். ஆனால் இதில் எதுவும் இந்தியாவுக்கு பலனளிக்கவில்லை. பிரதமரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி விவசாயிகளின் நலனை விட்டுச் செல்ல முடியாது'' என்றார்.

இதையும் படிங்க: டைம் வெளியிட்ட 100 தலைவர்கள் பட்டியலில் "ஷாகீன் பாக்" பாட்டியின் பெயர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.