நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள ஜார்கண்ட் மாநிலம் குசாய் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கோப்ரா பிரிவு வீரர்களும், மாநில காவல் துறையினரும் இன்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்பொழுது, புதைத்து வைக்கப்பட்டிருந்த கன்னி வெடிகுண்டுகள் வெடித்தன. அதிகாலை ஐந்து மணிக்கு நடைபெற்ற இந்தத் தாக்குதலில், எட்டு கோப்ரா படை வீரர்கள், மூன்று காவல் துறையினர் என மொத்தம் 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.