டெல்லியில் மிகவும் பிரபலமான சுற்றலாத் தலம் குதுப்மினார் (Qutub Minar). இங்கு கடந்த திங்கள்கிழமை காலை மூன்றரை மணியளவில் கார் ஒன்று வேகமாக குதுப்மினார் அருகே சுவரின் மீது மோதி தீ பிடித்து எரிந்துள்ளது.
இதைப் பார்த்த பாதுகாப்பு காவலர்கள், உடனடியாக ஓட்டுநரை காரிலிருந்து மீட்டனர். உடல் முழுவதும் தீ காயங்களுடன் இருந்த அவரை, மருத்துவனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், காரின் ஓட்டுநர் மகிபல்பூரில் வசிக்கும் அருண் சவுகான் என்பதும், குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி சுவற்றில் மோதியதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவை வெல்ல ஆன்டிபாடி கண்டுபிடிப்பு!