ETV Bharat / bharat

தயவுசெய்து நடந்துபோக வேண்டாம் - அசோக் கெலாட் வேண்டுகோள் - புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஜெய்ப்பூர்: அரசு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடுசெய்து கொடுத்திருப்பதால் குடிபெயர்ந்தோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்துசெல்ல வேண்டாம் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Gehlot
Gehlot
author img

By

Published : May 10, 2020, 10:42 AM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக குடிபெயர்ந்தோர் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல மத்திய அரசு அனுமதியளிக்க மறுத்தது. அதன்பின் மே முதல் வாரம், அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.

அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் வெளிமாநிலங்களில் குடிபெயர்ந்த தங்கள் தொழிலாளர்களை அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும் சிலர் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் அரசு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடுசெய்து கொடுத்திருப்பதால் குடிபெயர்ந்தோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்துசெல்ல வேண்டாம் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

குடிபெயர்ந்தோரை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச்செல்வது குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உயர் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதில், குடிபெயர்ந்தவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதிகளை ஏற்பாடு செய்துதருமாறு அசோக் கெலாட் அறிவுறுத்தினார்.

மேலும், சொந்த மாநிலங்களுக்குச் செல்ல பதிவுசெய்தவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் செல்லவிருக்கும் ரயிலின் தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களைப் பயணிகளுக்கு முறையாகத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா, தலைமைச் செயலர் டி.பி. குப்தா, கூடுதல் தலைமைச் செயலரும் உள் துறை செயலருமான ராஜீவா ஸ்வரூப், காவல் துறைத் தலைவர் பூபேந்திர சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த தங்கள் மாநிலத்தவர்களை மீட்க முனைப்புக் காட்டப்படவில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.