வேளாண் மசோதாக்கள் கடந்த 20ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், குறிப்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அமலியில் ஈடுபட்டனர்.
இதனால் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அவர்களை இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து விலக்கி இடைநீக்கம் செய்தார். இதனையடுத்து அவர்கள் எட்டு பேரும் நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு(செப்.21) முழுவதும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆதார் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
वीरों की ये बाट है भाई कायर का नही काम रे भैया कायर का नही काम सर पर बाँध कफ़न जो निकले बिन सोचें परिणाम रे कायर का नही काम रे भैया कायर का नही काम। pic.twitter.com/U0yyxfqE9h
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">वीरों की ये बाट है भाई कायर का नही काम रे भैया कायर का नही काम सर पर बाँध कफ़न जो निकले बिन सोचें परिणाम रे कायर का नही काम रे भैया कायर का नही काम। pic.twitter.com/U0yyxfqE9h
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) September 21, 2020वीरों की ये बाट है भाई कायर का नही काम रे भैया कायर का नही काम सर पर बाँध कफ़न जो निकले बिन सोचें परिणाम रे कायर का नही काम रे भैया कायर का नही काम। pic.twitter.com/U0yyxfqE9h
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) September 21, 2020
தொடர்ந்து இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சார்பில் வீட்டில் செய்யப்பட்ட இட்லிகள் உண்பதற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்பகுதியில் வெப்பம் அதிகரிப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்ககள் அருகில் இரண்டு மின் விசிறிகள் வைக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து மத்திய அரசு முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் தலையணை, படுக்கை விரிப்புகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு அங்கேயே இருந்து மேலும் தொடர் போராட்டத்தை நடத்தப்போவதாக இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்தார்.
இவர்களுக்கு தேநீர், சோடா உள்ளிட்ட பானங்களும் அங்கு வழங்கப்பட்டதுடன் அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயக இந்தியாவில் தொடரும் அடக்குமுறை: எம்பிக்கள் சஸ்பெண்ட் பற்றி ராகுல் காந்தி!