ETV Bharat / bharat

'மோடி... எடப்பாடி... கிரண்பேடி... மூவரால் மக்களுக்கு தொல்லைதான்!' - ஸ்டாலின் காட்டம் - ஸ்டாலின் பேச்சு

புதுச்சேரி: இந்தியாவிற்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரிக்கு கிரண்பேடி என மூன்று பேரும் மக்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் ஸ்டாலின் பரப்புரை
author img

By

Published : Apr 11, 2019, 2:35 PM IST

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பரப்புரை பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து கடந்தமுறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற என்ஆர் காங்கிரஸ், ஏன் அதை செய்யவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டது முதன் முதலில் திமுகதான். இந்தியாவிற்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரிக்கு கிரண்பேடி என மூன்று பேரும் மக்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு ஆளுநர் தனியாக ஒரு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதை தட்டிக்கேட்க எடப்பாடிக்கு தைரியம் இல்லை. ஆனால் புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி அராஜகத்தை முதலமைச்சர் நாராயணசாமி எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிய ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர். அதனால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பது நிச்சயம், என்றார்.

புதுச்சேரியில் ஸ்டாலின் பரப்புரை

பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Intro:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டது முதன் முதலில் திமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி பொது கூட்டம் நடுவில் உரையாடினார்

Body:புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற என் ஆர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரால் ஏன் மாநில அந்தஸ்து பெற்றுத் தர முடியவில்லை என்ற அவர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டது முதன் முதலில் திமுக தான் என்றார் இந்தியாவுக்கு பிரதமர் மோடி தமிழகத்தில் எடப்பாடி புதுச்சேரிக்கு கிரேன் பேடி என மூன்று பேரும் மக்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக ஆளுநர் தனியாக ஒரு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் அதை தட்டி கேட்க எடப்பாடிக்கு தைரியம் இல்லை ஆனால் புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி அராஜகத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார் என்றார் ராகுல் காந்தியை புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என கூறியிருக்கிறார் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் நிச்சயம் புதுச்சேரி மாநில அந்தஸ்து கிடைக்கும் எனவே ஆணவத்தை அடக்க அவரை விரட்ட அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் புதுச்சேரியில் ஆட்சி தொடர இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் இந்த பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்

Conclusion:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டது முதன் முதலில் திமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி பொது கூட்டம் நடுவில் உரையாடினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.