ETV Bharat / bharat

ராகுல் காந்திக்கு கொரோனா?

டெல்லி: இத்தாலியிலிருந்து வந்துள்ள ராகுல் காந்தி தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Raga
Raga
author img

By

Published : Mar 4, 2020, 11:06 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார்.

இதுகுறித்து பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி கூறுகையில், "சமீபத்தில்தான் ராகுல் காந்தி இத்தாலியிலிருந்து திரும்பினார். விமான நிலையத்தில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. மக்களை சந்திக்கும் முன்பு கொரோனா தொற்று இல்லை என்பதை அறிந்துகொள்வதற்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றாரா என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். மக்களின் நலனில் இது முக்கிய பங்காற்றுகிறது" என்றார்.

இதுவரை கொரோனா தொற்றால் இந்தியாவில் 28 பேர் பாதிப்படைந்துள்ளனர். ராகுல் காந்தியின் இத்தாலி பயணம் குறித்து காங்கிரஸ் எந்த ஒரு அதிகாரப்பூர்வு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொழில்நுட்பக் கோளாறு: ஜிஎஸ்எல்வி - எப் 10 ராக்கெட் ஏவுவது ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.