லண்டனில் இருந்து லக்னோவுக்கு திரும்பிய பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் பல விழாக்களில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் எம்பியுமான துஷ்யந்த் சிங் ஆகியோர் கனிகா கபூரை ஒரு விழாவில் சந்தித்துள்ளனர்.
இதனால் இருவரும் தங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் துஷ்யந்த் சிங்குக்கு அருகே அமர்ந்த காரணத்தால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரையன் தனக்கு கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரையன் கூறுகையில், "இந்த அரசு அனைவரின் உயிரையும் ஆபத்தில் தள்ளியுள்ளது. தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் கூறுகிறார். ஆனால், நாடாளுமன்றம் தொடர்ந்து இயங்கிவருகிறது. துஷ்யந்த் சிங்குக்கு அருகே 2.5 மணி நேரம் அமர்ந்து கொண்டிருந்தேன். மேலும், இரண்டு எம்பிக்கள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருக்கு கரோனா?