ETV Bharat / bharat

டெல்லி வன்முறை: ஜாமியா மாணவர் தன்ஹாவுக்கு காவல் நீட்டிப்பு - ஜாமியா மாணவர் தன்ஹாவுக்கு காவல் நீட்டிப்பு

டெல்லி: வன்முறை தொடர்பான வழக்கில், ஜாமியா மாணவர் அமைப்பு தலைவர் தன்ஹாவை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தன்ஹா
தன்ஹா
author img

By

Published : May 21, 2020, 2:08 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. கடந்த ஆண்டு, டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இதில், சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு காரணமாக பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, ஜாமியா பல்கலைக்கழக வளாகம் வெளியே காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள், காவலர்கள் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே, மே 17ஆம் தேதி வன்முறையை காரணம் காட்டி, ஜாமியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான தன்ஹா கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, கலவரத்தை தூண்டியதில் தன்ஹா முக்கிய பங்காற்றினார் என காவல் துறை தெரிவித்தது.

இதற்கு முன்னதாக, காவல் துறையினர் மீரான் ஹைதர், சபூரா சர்கர் ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனிடையே, டெல்லி வன்முறை குறித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தன்ஹாவை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு மாவட்ட கூடுதல் நீதிபதி அஜய் குமார் ஜெயின் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம்: சிவராஜ் சிங் சவுகான் vs கமல்நாத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.