டெல்லியை சேர்ந்த வழக்குரைஞர் அனுராக் சௌகான், மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில், “கரோனா சுகாதார நெருக்கடி, நாடு தழுவிய பொதுஅடைப்பு காரணமாக பாலியல் தொழிலாளர்கள் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அவர்களுக்கு பொருளாதார உதவி, உணவு, பாதுகாப்பு, மருந்துகள் கொடுக்க வேண்டும். மேலும், “தொற்றுநோய் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் தனியாக ஒரு உதவி எண் (ஹெல்ப்லைனை) அமைக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களை மறுவாழ்வு செய்ய ஒரு குழுவையும் அமைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சஹாய் எண்ட்லா மற்றும் சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதற்கான காரணம் குறித்தும் நீதிபதிகள் விளக்கம் அளித்திருந்தனர்.
இது குறித்து வழக்குரைஞர் அனுராக் சௌகான் கூறுகையில், “இந்தப் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் ஆகியோருக்கு மனு அளித்திருந்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே நீதிமன்றம் சென்றேன்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் மேற்கு வங்க சுகாதாரத் துறை செயலர் பணியிட மாற்றம்!