ETV Bharat / bharat

முன்னாள் மத்திய அமைச்சர் மீதான பாலியல் வழக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Jan 25, 2020, 1:58 PM IST

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் வழக்கின் இறுதிகட்ட வாதத்தை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Akbar
Akbar

நாடு முழுவதும் ’மீ டு’ (#Metoo) சர்ச்சை அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். தானும் எம்.ஜே. அக்பரும் ஒரே ஊடக நிறுவனத்தில் பணியாற்றிவந்தபோது, அவர் தன்னை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தினார் என பிரியா ரமணி தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2018ஆம் ஆண்டு, பிரியா ரமணி, அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி நூலாசிரியரும், பத்திரிகையாளருமான கசாலா வாஹப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஒரே ஊடக நிறுவனத்தில் பணியாற்றியபோது, எம்.ஜே. அக்பர் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

குற்றம்சாட்டியவர் பிரியா ரமணி என்பதால், வாஹப்பின் வாதம் செல்லாது என அக்பர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். இறுதிகட்ட வாதத்தின்போதே சாட்சியம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் வழக்கில் உங்களுக்கு தொடர்புடையது, குற்றம்சாட்டப்பவருக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, ரமணி தரப்பு வழக்கறிஞர், "அவதூறு பரப்பி தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அக்பர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, இவ்வழக்கில் சாட்சியத்தை விசாரிப்பது முக்கியமாகிறது" எனத் தெரிவித்தார். கூடுதல் தலைமை மாஜிஸ்ட்ரேட், நீதிமன்றத்திற்கு நேற்று செல்லாத காரணத்தால் வழக்கின் இறுதிகட்ட வாதத்தை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சருடன் கிரிக்கெட் விளையாடிய பாண்டியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.