ETV Bharat / bharat

'101 ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை... வெறும் பிதற்றல்’ - சிதம்பரம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம்

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடை கடைசியில் குழப்பத்தில்தான் முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Chidambaram
Chidambaram
author img

By

Published : Aug 9, 2020, 4:54 PM IST

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறைக்கான 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இதன்படி, பாதுகாப்புத்துறையில் பயன்படுத்தப்படும் 101 ராணுவத் தளவாடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பில் தன்னம்பிக்கைக்கு இது ஒரு பெரிய படியாகும். தடைசெய்யப்பட்ட 101 ராணுவத் தளவாடங்களின் பட்டியலில் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், எல்.சி.ஹெச். ரேடார்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும், இந்தத் தடையை 2020 முதல் 2024ஆம் ஆண்டிற்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 52,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த தடையை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் அடுத்தடுத்து ட்விட்டரில் பதிவுகள் வெளியிட்டிருந்தார். அதில், “ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) காலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மிகப்பெரிய குரலில் உறுதியளித்துள்ளார். இது கடைசியில் குழப்பத்தில்தான் முடியும்.

  • Import Embargo is high sounding jargon. What it means is we will try to make the same equipment (that we import today) in 2 to 4 years and stop imports thereafter!

    — P. Chidambaram (@PChidambaram_IN) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாதுகாப்புத் துறை அமைச்சகம்தான் பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்கிறது. எவ்வித இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடையாகும்.

  • The only importer of defence equipment is the Defence Ministry. Any import embargo is really an embargo on oneself. What the Defence Minister said in his historic Sunday announcement deserved only an Office Order from the Minister to his Secretaries!

பாதுகாப்புத் துறை அமைச்சர் எதை ’வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு’ என சொன்னாரோ, அது அவரது செயலாளர்கள், அலுவலகத்துக்கு மட்டும் விடுத்த அறிவிப்பு. இறக்குமதி தடை என்பது உரத்த குரலில் வெளிப்படும் பிதற்றல். இதன் பொருள் என்னவெனில் (நாம் இன்று இறக்குமதி செய்வோம்), அதே பொருள்களை நாம் 2 முதல் 4 ஆண்டுகளில் தயாரிக்க முயல்வோம். அதன்பின் இறக்குமதியை நிறுத்தலாம் என்பதாகும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 101 ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை - ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.