மேற்கு வங்கம் மாநிலத்தில் 'ஆம்பன்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ. 6,250 கோடி நிதி ஒதுக்கி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர், "மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மாவட்ட நிர்வாகங்களின் தகவல்களின்படி, ஆம்பன் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86லிருந்து 98ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் கும்பங்களுக்கு நிவாரண நிதி அளித்துவருகிறோம்.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2.5 லட்சம் வழங்கப்படுகிறது. மோசமாக காயமடைந்தவர்கள், சிறிய காயங்கள் என முறையே ரூ. 50,000 மற்றும் ரூ. 25,000 வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டவும், விவசாயிகளுக்கு உதவவும், கட்டுமானங்கள் மற்றும் பழுதுபார்க்கவும் ரூ. 6,250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புயலுக்கு பின்னர் மறுசீரமைப்பு மூலம், ஆறு மாவட்டங்களில் 80 விழுக்காடு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய 10 நகரங்களில் 100 விழுக்காடு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மேற்கு வங்காளத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் தளர்வுகள்' - மம்தா பானர்ஜி