ETV Bharat / bharat

தாசில்தார் கைது விவகாரத்தில் விதிமீறல்: நான்கு காவல்துறையினர் மீது நடவடிக்கை

புதுச்சேரி: தாசில்தார் கைது விவகாரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட எஸ்.எஸ்.பி உள்ளிட்ட காவல்துறையினர் நான்கு பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறை விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

puducherry
puducherry
author img

By

Published : Jul 8, 2020, 8:18 AM IST

புதுச்சேரி மடுகரை பகுதியில் மதுக் கடையை திறந்து மதுபானம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தாசில்தார் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இது, வருவாய் துறை அலுவலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

அதனடிப்படையில், புதுவை சார் ஆட்சியர் சுதாகர் இதுகுறித்து விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், தாசில்தார் கார்த்திகேயனை காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்தது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜசூர்யா தலைமையிலான காவல்துறை விசாரணை ஆணையம் விசாரித்து அதில் விதிமுறைகளை மீறி வாரண்ட் இல்லாமல் தாசில்தார் கார்த்திகேயனை காவல்துறையினர் செய்ததாகவும் வீட்டில் பெண்கள் உள்ள நிலையில் நள்ளிரவில் ஆண் காவலர்கள் புகுந்து சோதனை நடத்தியதாகக் கூறப்பட்டது.

ஏப்ரல் 19ஆம் தேதி கைது செய்த நிலையில் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக காவலில் வைத்ததாகவும் பிணை கிடைத்தும் அவரிடமிருந்து பறிமுதல் செய்த மொபைல் போனை ஒப்படைக்கவில்லை என காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்தப் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை விசாரணை ஆணையம், தாசில்தார் கைது விவகாரத்தில் விதிகளை மீறிய எஸ்பி ராகுல் அல்வால் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், இனியன், ஏட்டு முரளிதரன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகபட்ச அபராதம் விதிக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பாடமாக வெளியிட தடை விதிக்க வேண்டும்" - தீபா வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.