நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இருப்பினும், பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் பல தளர்வுகள் அறவிக்கப்பட்டு சுற்றுலா சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடகில் சுற்றுலா சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணை ஆணையர் அன்னிஸ் கன்மணி ஜாய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனா தாக்கம் அதிகமாவதால் அனைத்து ரிசார்ட்ஸ், விடுதிகள், சுற்றுலாத் தலத்தில் உள்ள விடுதிகள் ஆகியவை அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.
இதுவரை அம்மாநிலத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 401ஆக உயர்ந்துள்ளது.