கரோனா நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாக உயர் அலுவலர்கள் ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில் பஞ்சாப், கேரளம், கோவா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன்16) ஜம்மு காஷ்மீர் யூனியன், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், டெல்லி, கர்நாடகா, குஜராத், பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநருடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மாநிலத்தில் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பாளர்கள் மூன்று லட்சத்து 32 ஆக உள்ளது. உயிரிழப்பு ஒன்பது ஆயிரத்து 520 ஆக உள்ளது.
மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்தாலோசிப்பது இது ஆறாவது தடவையாகும். இதற்கு முன்னர் கடந்த மாதம் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதையும் படிங்க: பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம்: மம்தா பேசுவதற்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு