ETV Bharat / bharat

மக்கள்வாழ்வாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்த வேண்டும் - குமாரசாமி - மக்கள் செலவுகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் - குமாரசாமி

பெங்களூரு: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்த வேண்டுமென கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ட்வீட் செய்துள்ளார்.

COVID-19 lockdown: Kumaraswamy calls for lowering cost of living

author img

By

Published : Apr 27, 2020, 10:35 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த திடீர் உத்தரவால் அடித்தட்டு மக்கள், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வு அமைப்புகளும் நிவாரணம் அளித்துவருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்த வேண்டுமென கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதவில் அவர், "ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டப் பிறகு பொருளாதாரத்தை உடனடியாக மீட்டெடுக்க முடியாது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கு சில சலுகைகளை அரசு வழங்க வேண்டும். குறிப்பாக, மாத தவணை, வீட்டு வாடகை, பள்ளிக்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை குறைக்க வேண்டும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு சரியவுள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. இம்மாதிரியான சூழலில் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள், கட்டடத் தொழிலாளிகள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், ஜவுளித் தொழிலாளிகள் ஆகியோருக்கு நிதியுதவியாக உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி எய்ம்ஸில் 11 பேருக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.