மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 2,958 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 984 பேரும், தமிழ்நாட்டில் 504 பேரும், குஜராத்தில் 441 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,391ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், நேற்று ஒரேநாளில் நாடு முழுவதும் இத்தொற்றால் 126 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக குஜராத்தில் 49 பேரும், மகாராஷ்டிராவில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,694ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று 1,456 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,183ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 15,525 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 617 பேர் உயிரிழந்துள்ளனர். 2819 பேர் குணமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து குஜராத்தில் 6,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 368 பேர் உயிரிழந்த நிலையில் 1,381 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 4,058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,485 பேர் குணமடைந்துள்ளனர். 33 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிரடி காட்டும் ஆந்திர முதலமைச்சர்: விவசாயிகளுக்கு செயலி அறிமுகம்!