கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்துவருகின்றன. தினந்தோறும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
![COVID-19](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6783187_y.png)
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்தியாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 363ஆக உள்ளது. 339 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்து 334 பேருக்கும் டெல்லியில் ஆயிரத்து 510 பேருக்கும் கரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.