ETV Bharat / bharat

அகமதாபாத்தில் 6,000 பேருக்கு கரோனா பாதிப்பு - அகமதாபாத் கரோனா பாதிப்பு

காந்திநகர்: குஜராத் முன்னாள் தலைநகரான அகமதாபாத்தில் கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை ஆறு ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை கோவிட்-19 பாதிப்பாளர்கள் 400 பேர் இறந்துள்ளனர்.

COVID-19  Ahmedabad  Gujarat  Coronavirus in Ahemdabad  COVID death  குஜராத் கரோனா பாதிப்பு நிலவரம்  அகமதாபாத் கரோனா பாதிப்பு  கோவிட்-19

author img

By

Published : May 12, 2020, 9:24 AM IST

புதிய கரோனா வைரஸ் கோவிட்-19 பெருந்தொற்று நோயிக்கு குஜராத்தில் எட்டு ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தமட்டில் 513 ஆக உள்ளது. இதற்கிடையில் திங்கள்கிழமை (மே11) 235 பாதிப்பாளர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.

மாநிலத்தில் திங்கள்கிழமை மட்டும் 347 புதிய பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 268 பேர் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வதோதரா (29), சூரத் (19), காந்தி நகர் (10), பஞ்சமஹலஸ் மற்றும் பனஸ்கந்தா (தலா நான்கு பேர்), பரூச், சபர்கந்தா, ஜாம்நகர், பதான் மற்றும் போடட் (தலா மூன்று பேர்), ஆனந்த், மேக்சனா (தலா இருவர்), பாவ்நகர், நர்மதா, ஆரவல்லி ஆகிய இடங்களில் தலா ஒருவர் என உள்ளனர்.

குஜராத்தில் தற்போது அம்ரேலி என்ற மாவட்டத்தில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் இதுவரை இல்லை. திங்கள்கிழமை நிலவரப்படி, அகமதாபாத்தில் அதிகப்பட்சமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் குணமுற்ற 235 பேருடன் சேர்த்து, இரண்டாயிரத்து 780 பேர் கரோனா பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 471 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 929 பேருக்கு, வைரஸ் பாதிப்புகள் இல்லையென்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'வைரஸ் மனித குலத்தை தொடர்ந்து பாதிக்கும்'- ஹர்ஷ் வர்தன் பிரத்யேக பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.