ETV Bharat / bharat

கோவிட்-19: தடுப்பூசி விநியோகம் என்பது தடைகள் பல தாண்ட வேண்டிய மிகப் பெரிய சவால் - பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன்

இப்போது மருத்துவ சோதனைகளுக்கு உட்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் நூற்றுக்கணக்கான பில்லியன் டோஸ்களை வெற்றிகரமான உற்பத்தி செய்வது என்பது உலகின் மிகப்பெரிய திட்டமாக இருந்தாலும், அவற்றை நாடுகளுக்கு அனுப்பி, அவற்றைப் பாதுகாப்பான நிலையில் பொது மக்களுக்கு விநியோகிப்பது என்பது இன்னும் பெரிய சவாலாகும்.

COVID vaccine
COVID vaccine
author img

By

Published : Sep 25, 2020, 5:35 AM IST

குழந்தைகளுக்கு, உயிர் காக்கும் தடுப்பூசிகளை ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி அமைப்பு (UNICEF) ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வழங்குகிறது. இந்தத் தடுப்பூசி லட்சக்கணக்கான குழந்தைகளை டெட்டனஸ், அம்மை, போலியோ, மஞ்சள் காய்ச்சல், கக்குவான் இருமல் ஆகிய நோய்களிலிருந்து காக்கிறது. இது ஆண்டுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசிகளை வாங்கி 100 நாடுகளில் உள்ள குழந்தைகளைக் காக்கிறது. இன்று UNICEF உலகிலேயே அதிக அளவில் தடுப்பூசிகளை வாங்கும் அமைப்பாக உள்ளது.

92 ஏழை நாடுகளில் கோவிட்-19 தடுப்பூசியை வழங்குவதற்கான பொறுப்பையும் யுனிசெப் விரைவில் ஏற்றுக் கொள்ளும். உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்ட கோவாக்ஸ் திட்டத்தை GAVI- தடுப்பூசி கூட்டணி வழிநடத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை வாங்கி விநியோகிக்க UNICEF பொறுப்பேற்கும்.

தற்போது மருத்துவ சோதனைகளுக்கு உட்பட்டுள்ள பல கோவிட் தடுப்பூசிகளில் இருந்து, சோதனையில் வெற்றி பெறும் தடுப்பூசி உற்பத்தியாளர்கள், அடுத்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸ்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தயாரித்து விநியோகிக்க வேண்டும். 10 நாடுகளில் மொத்தம் 28 தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கோவிட்-19 தடுப்பூசிகளை தயாரிக்க தயாராக உள்ளனர்.

உலகில் உள்ள 7௦௦ கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது செலவு அதிகமாகும் ஒரு செயல். மருத்துவ சோதனைகள் முடிந்து, கொள்முதல் செய்வதற்கு முந்தைய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நிதி மற்றும் நடைமுறை ஒப்புதல்களை வழங்கியவுடன் உற்பத்தி தொடங்கும்.

பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷனின் (PAHO) சுழலும் நிதியுடன் இணைந்து, வளர்ந்து வரும் நாடுகளுக்கு UNICEF தடுப்பூசிகளை விநியோகிக்கும். கோவக்ஸ் திட்டத்தில் 80 பணக்கார நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்த நாடுகள் கோவிட்-19 தடுப்பூசி வாங்குவதற்காக தங்கள் சொந்த வரவு செலவுத் திட்டங்களிலிருந்து நிதி ஒதுக்குகின்றன. UNICEF அவர்கள் சார்பாக தடுப்பூசி வாங்குவதற்கான ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறது.

பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு, அவர்களின் சொந்த நிதி மூலம் தடுப்பூசி போட விரும்புவதால், இந்த நாடுகளின் நிதி, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆரம்ப முதலீடுகளாக செயல்படும். கோவக்ஸ் திட்டத்தில் பங்கேற்பதற்கு, பணக்கார நாடுகள் செப்டம்பர் 18 அன்று UNICEFஉடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. கோவக்ஸ் திட்டத்தின் குறிக்கோள், கோவிட் தடுப்பூசி உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.

உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, GAVI தடுப்பூசி கூட்டணி, PAO, SEPI, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து UNICEF கோவாக்ஸ் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும். மேற்கூறிய அமைப்புகளின் நிதி உதவியானது, ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட மிகவும் உதவியாக இருக்கும். GAVI- தடுப்பூசி கூட்டணி மற்றும் UNICEF ஆகியவை கடந்த 20 ஆண்டுகளில் 76 மில்லியன் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசிகளை வழங்கி, 1.3 மில்லியன் இறப்புகளைத் தடுத்துள்ளது. அந்த அனுபவம் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உதவும்.

மிகப்பெரிய திட்டம்

இப்போது மருத்துவ சோதனைகளுக்கு உட்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் நூற்றுக்கணக்கான பில்லியன் டோஸ்களை வெற்றிகரமான உற்பத்தி செய்வது என்பது உலகின் மிகப்பெரிய திட்டமாக இருந்தாலும், அவற்றை நாடுகளுக்கு அனுப்பி, அவற்றை பாதுகாப்பான நிலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பது என்பது இன்னும் பெரிய சவாலாகும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே தொடங்குமாறு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) அரசாங்கங்களையும் தொழிற்சாலைகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. தடுப்பூசிகளை விமானம் மூலம் கொண்டு செல்வது எளிதானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கோவிட் தடுப்பூசியை பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டு செல்வது இந்த நூற்றாண்டின் சாதனைகளில் முன்கண்டிராத சாதனையாகவே இருக்கும்.

கோவிட் நெருக்கடிக்கு காரணமாக உலகம் முழுவதும் தற்போது விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேவையான அளவு விமானங்கள் கிடைக்கவில்லை; பல விமானங்கள் அவை நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. UNICEF, உலக சுகாதார அமைப்பு மற்றும் GAVI ஆகியவை, எதிர்காலத்தில் கோவிட் தடுப்பூசியை இலக்குகளுக்கு விரைவாக அனுப்புவதில் சிக்கலாக இருக்கும் என்று கவலை கொண்டுள்ளது. 780 மில்லியன் உள்ள உலக மக்கள்தொகைக்கு தலா ஒரு தடுப்பூசி வழங்க 8,000 போயிங் 747 ஜம்போ ஜெட் விமானங்கள் தேவைப்படும். இரண்டு தடுப்பூசி தேவைப்படும் எனில், அந்த நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்.

உள்ளூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களைக் கொண்ட வசதியான நாடுகளில், தடுப்பூசிகளை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் சர்வதேச அளவில் அனுப்புவதற்கு விமானம் தேவைப்படுகிறது. ஏழை நாடுகளில் விமானங்கள் தரையிறங்கிய பின்னர், அந்த நாடுகளில் போதுமான அளவு குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இல்லாத, பாதுகாப்பற்ற சாலை உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நாட்டின் மூலை மற்றும் மூலையில் உள்ள மக்களுக்கு சாலை வழியாக தடுப்பூசி விநியோகிப்பது என்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்த தடைகளை சமாளிக்கவும் கோவிட் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும் UNICEF அரசாங்கங்கள், உற்பத்தி, கொள்முதல், போக்குவரத்து மற்றும் விநியோக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

தடுப்பூசியை கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய பாதுகாப்பு தேவை

தடுப்பூசி தயாரிக்கப்பட்ட உடனேயே அனைத்து அனுமதிகளும் பெறப்பட வேண்டும், மேலும் தடுப்பூசி அளவுகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் சேமிக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள இடங்களுக்கு விரைவாக வழங்கப்பட வேண்டும். எந்தவொரு தவறு நடந்தாலும் தடுப்பூசி திறன் குறைந்துவிடும் என்பதால் குளிர்பதன வசதிகளே முன்னுரிமையாக இருக்க வேண்டும் தேவையான புதிய குளிர்பதன சேமிப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் பழைய குளிரூட்டப்பட்ட கிடங்குகளில் மாற்றங்களைச் செய்வதற்கும் தேவையான ஏற்பாடுகளை இப்போதிலிருந்து தொடங்க வேண்டும்.

தடுப்பூசிக்கு பாதுகாப்பாக சேமிப்பதற்கு ஏற்ற வெப்பநிலை பற்றி அறிந்த ஏராளமான பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது தடுப்பூசி கெட்டுப் போகாமல் இருப்பதை உறுதிப்படுத்த தொடர் கண்காணிப்பு தேவை. தேவைப்பட்டால், அதற்கேற்ற சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

விமானத்தில்கொண்டு செல்லும்போது தடுப்பூசிகள் திருடு போகாமலிருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அந்தந்த நாடுகளின் எல்லைகளை கடக்கும்போது, ​​சுகாதார மற்றும் சுங்க அதிகாரிகள் அனுமதி தொடர்பான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை எந்தவித தாமதமும் இன்றி செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி ஏற்றிச் செல்லும் விமானங்கள், விமான நிலையங்களில் தரையிறங்கவோ அல்லது தரையிறங்காமல் விண்ணில் பயணத்தைத் தொடரவோ ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.

தரையிறங்கிய விமானக் குழுவினருக்கு தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஒரு நாட்டில் விமானம் தரையிறங்கியவுடன், தடுப்பூசிகளை இறக்குவதற்கான அனுமதியை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக வழங்கி, அதை விரைவில் மாற்றி பாதுகாப்பான நிலையில் சேமிக்க வேண்டும். வெப்பநிலையில் உள்ள வேறுபாடு காரணமாக தடுப்பூசி கெட்டுப்போவதைத் தடுக்க இது மிகவும் முக்கியமானது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.