இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தற்போது நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை 21ஐ எட்டியுள்ள நிலையில், அம்மாநில அரசு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடுவதாக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 23ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு நடைபெற முடியாத சூழல் தற்போது எழுந்துள்ளது. இதையடுத்து அம்மாநில அரசு மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற தேர்வுகளும் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவிற்கு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் விஜய பாஸ்கர்!