மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள ஒமதி காவல் நிலையத்தில் ஆனந்த் பாண்டே கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தினால் அவரை பார்ப்பதற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூருக்கு அவர் சென்றார்.
அச்சமயத்தில்தான், கரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், ஆனந்த் கான்பூரிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. இருப்பினும் இக்கட்டான சூழ்நிலையில் பணிக்குச் செல்ல முடியாமல் வருத்தப்பட்டிருந்த அவர், திடீரென்று அங்கிருந்து நடைப்பயணமாகவே புறப்பட்டார்.
சுமார் மூன்று நாள்கள் நீடித்த அவரின் பயணத்தில், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் லிஃப்ட் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. வேலை மீதான இவரின் பற்றை காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவரும் ஒன்று திரண்டு பாராட்டினர். இவர் கான்பூரிலிருந்து ஜபல்பூர்வரை சுமார் 450 கி.மீ நடந்தே பணிக்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கில் காவலரின் கையை வெட்டிய நிஹாங்ஸ்