மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், தேர்தல் முடிவுகளை ஆராய்வதற்காக 17 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார்.
மன்மோகன் சிங், ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கே, அம்பிகா சோனி, கபில் சிபல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இக்குழுவின் முதல்கூட்டம் இன்று மாலை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நாளை நடைபெறுகிறது.
தேசிய மக்கள் பதிவேடு, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீது வழக்குகள், கைது நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய பாஜக அரசை எதிர்கொள்வது குறித்தும், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை போன்ற பிரச்சினைகளை நாடளுமன்றத்தில் விவாதிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் யார் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் காண்பிக்கும் - ஓபிஎஸ்