ETV Bharat / bharat

#inxmediacase - ப. சிதம்பரத்தை சந்திக்க சோனியா, மன்மோகன் திகார் வருகை! - ஐஎன்எக்ஸ் மீடியா

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் திகார் சிறைக்குச் சென்றுள்ளனர்.

sonia and manmohan arrives tihar jail
author img

By

Published : Sep 23, 2019, 9:44 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நள்ளிரவு கைது செய்தது. சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், பிணை கோரி மனு அளித்தார். செப்டம்பர் 5ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

அதன்பிறகு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த முறையும் சிபிஐ அவரது பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு பிணை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என சிபிஐ தரப்பு தெரிவித்தது. இதனால் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது.

sonia and manmohan arrives tihar jail
sonia and manmohan arrives tihar jail

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் திகார் சிறைக்கு வந்துள்ளனர்.

Intro:Body:

v

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.