ETV Bharat / bharat

'அவர் பேசியிருக்கலாம், இனி பயனில்லை' - ஜோதிராதித்ய சிந்தியா குறித்து காங்கிரஸ் - 'அவர் பேசியிருக்கலாம், இனி பயனில்லை'- ஜோதிராதித்ய சிந்தியா குறித்து காங்கிரஸ்

டெல்லி: ஜோதிராதித்ய சிந்தியா தனது பிரச்னை குறித்து, கட்சி மேலிடத் தலைவர்களிடம் பேசியிருக்கலாம். இனி பயனில்லை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் மீம் அப்சல் கூறினார்.

Delhi riots Riot victims Jyotiraditya Scindia Meem Afzal Delhi government Delhi Police Amit Shah 'அவர் பேசியிருக்கலாம், இனி பயனில்லை'- ஜோதிராதித்ய சிந்தியா குறித்து காங்கிரஸ் டெல்லி வன்முறை, ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ், இழப்பீடு, டெல்லி, மீம் அப்சல் பேட்டி
Congress demands compensation for Delhi riot victims
author img

By

Published : Mar 13, 2020, 5:10 PM IST

காங்கிரஸ் மூத்தத் தலைவர் மீம் அப்சல் டெல்லியில் இன்று (மார்ச்13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்குப் பதிலளித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் புகைப்படம் மற்றும் முகவரியுடன் உத்தரப் பிரதேசத்தில் வைக்கப்பட்ட பதாகை குறித்தும் அவர் பேசுகையில், 'இது சங்கடமான நிகழ்வு' என்றார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், 'டெல்லி கலவரத்தில் 54க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வெகுஜன மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்கு பொறுப்பேற்று, அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

டெல்லி வன்முறையில் பலியான மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் பதாகை வைக்கப்பட்டது ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான தருணம். அரசு பொது மக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மும்முரமாக உள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியா தனது பிரச்னை குறித்து கட்சி உயர் மட்டத் தலைவர்களிடம் பேசியிருக்க வேண்டும். எனினும், இனி பயனில்லை. அவர் கட்சியைக் குறை கூறுவதிலேயே மும்முரமாக இருக்கிறார்' என்றார்.

இதையும் படிங்க: பதாகை விவகாரம்: உ.பி. அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.