அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தலைமையின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அரசியலில் காங்கிரஸ் கமிட்டி தீவிர களம் கண்டுவருகிறது.
இதற்காக தேர்தல் வரைவுக் குழு, மக்கள் தொடர்புக் குழு, உறுப்பினர் சேர்ப்புக் குழு, திட்ட அமலாக்கக் குழு, பயிற்சிக் குழு, பஞ்சாயத்து தேர்தல் குழு, ஊடகக் குழு என ஏழு தனித்தனி குழுக்களை காங்கிரஸ் அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தக் குழுக்களில் சல்மான் குர்ஷித், பி.எல்.பூனியா, ஆராதனா மிஸ்ரா, சுப்ரியா ஸ்ரினேட், விவேக் பன்சால், அமிதாப் துபே, பிரமோத் திவாரி, பிரதீப் ஜெயின் ஆதித்யா, நாசிமுதீன் சித்திக், இம்ரான் மசூத், ரஷீத் ஆல்வி, நிர்மல் காத்ரி, நசீப் பதான் போன்ற மூத்தத் தலைவர்கள் அங்கம் வகித்து தலைமை தாங்க உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் இருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.