ETV Bharat / bharat

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி ; கோவாவில் பாஜக ஆட்சி தொடர்கிறது! - கோவா சட்டப்பேரவை

பனாஜி: கோவா சட்டப்பேரவையில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது பெரும்பான்மையை நிரூப்பிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

goa
author img

By

Published : Mar 20, 2019, 5:25 PM IST

கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் கணையம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில், நேற்று அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோவா பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக நேற்று மதியம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் கூட்டணிக் கட்சியான கோவா முன்னணியைச் சேர்ந்த விஜய் சர்தேசாயும், மஹாராஷ்டிரவாடி கோமன்டக் கட்சி எம்எல்ஏ சுதின் தாவலிக்கார் ஆகியோரும் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தகோரி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மிருதுளா சின்ஹா, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அனுமதியளித்தார். இதனையடுத்து, இன்று காலை சுமார் 11 மணிக்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் 19 எம்எல்ஏ ஆதரவு தேவைப்பட்ட நிலையில், 20 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

இதில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த்திற்கு எதிராக 15 எம்எல்ஏ-க்கள் எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Dummy article _ maha

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.