கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "உழைப்பால் உயர்ந்தவர், காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு முனைந்து பாடுபட்டார். அன்னை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ராகுல் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்தவர். தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இப்படிப்பட்ட தலைவர் நம் மத்தியில் இல்லை, அவரது இழப்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தாருக்கு இந்த இழப்பை தாங்கிக் கொள்ள இறைவன் சக்தியளிக்க வேண்டும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமானார்!