ETV Bharat / bharat

17 வயது, 9ஆம் வகுப்பு.. இரட்டை கொலையில் சிக்கிய மாணவன்!

லக்னோ: இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 17 வயதான 9ஆம் வகுப்பு பள்ளி மாணவனிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

class-9-student-held-for-double-murder-in-Gorakhpur up state
கைது
author img

By

Published : Jun 13, 2020, 8:22 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் பர்கத்வா கிராமத்தில் மே 24-ஆம் தேதி உறவினர்களான கிருஷ்ணன் (25), திவாகர் (23) ஆகிய இருவர் கோரா நதிக்கரை அருகில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில், ஒன்பது பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.

விசாரணையில், தனக்கு வயது 17 என்று அவர் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் தரப்பில் இருந்து அவருக்கும் 20 வயது இருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "அந்த இளைஞர், 18 வயதுக்கு உள்பட்டவர்தான் என்று நிரூபிக்க எந்த ஒரு ஆதாரத்தையும் அவரின் பெற்றோரால் காட்ட முடியவில்லை” என்றனர்.

மேலும், “சமூக வலைதளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்” என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட மனவிரக்தியில் கணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.