அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வரும் பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவிற்கு வருகைதரும் டொனால்டு ட்ரம்ப், ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலையும் சுற்றிப்பார்க்க உள்ளார். இதற்காக தாஜ்மகால் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தாஜ்மகால் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் மிக அதிமாக உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளையும், அவர்கள் கொண்டுவரும் தின்பண்டங்களையும் குரங்குள் பறித்துச் செல்வதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
டொனால்ட் டிரம்ப் வருகை தரக்கூடிய நாளில் குரங்குகளால் ஏதேனும் பிரச்னைகள் வரலாம் என செய்திகள் வெளியாகியது. இதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய சிஐஎஸ்எஃப் காமண்டன்ட் பிரிஜ் பூஷண், கடந்த ஆறு நாள்களாக குரங்குகள் அட்டகாசம் குறைந்துள்ளது. டிரம்ப் வரும் நாளில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருக்காது என்பதால் அன்று குரங்குகளால் எவ்வித பிரச்னையும் இருக்காது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அ(மெரிக்கா)ங்கே 'ஹவுடி மோடி', இ(ந்தியா)ங்கே 'நமஸ்தே ட்ரம்ப்'