லடாக் நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய- சீன ராணுவ அலுவலர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சீனா பகுதியில் உள்ள மோல்டா பாயிண்ட்டில் இந்தப் பேச்சுவார்த்தை பல மணிநேரம் நடைபெற்றது.
மேலும் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லவும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளிலிருந்து ராணுவத்தை முழுமையாக விலக்குவது தொடர்பாக இருதரப்பும் விவாதித்தது. அதில் ஏற்பட்டுள்ள சமரச முடிவை மீற மாட்டோம் என இருநாட்டுப் பிரதிநிதிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அங்கு இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று லடாக் பகுதியைப் பார்வையிட ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.