கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் வீடற்ற சாலையோர வாசிகள் உணவு இன்றி தவித்தனர். இதையடுத்து அரசு சார்பில் கோரிமேட்டு பகுதியில் வீடற்றவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று கோரிமேடு வீடற்றவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, முகக் கவசங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ஊரடங்கில் உதவிக்கரம் நீட்டிய மனிதநேயர்