பழங்குடியின மக்களின் நடனக் கலையை உயிர்ப்புடன் வைத்துக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய பழங்குடியின நடனத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், 2019ஆம் ஆண்டிற்காக தேசிய பழங்குடியின நடனத் திருவிழா சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் அம்மாநில தலைநகர் ராய்ப்பூரில் வரும் 27,28,29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ஆஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் நடனக்கலைஞர்கள் 39 குழுக்களாகப் பிரிக்கப்படுவர். விழாவில் நான்கு பிரிவுகளில் 43 வகையாக நடனக் கலைகளை இடம்பெறுகின்றன.
இந்தத் திருவிழாவில் சத்தீஸ்கர் மாநில ஆளுநர் அனுசூர்யா உக்கே தலைமை அழைப்பாளராக கலந்துகொள்ள உள்ளார். இவரை தவிர, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விழாவின் திறப்பு விழாவில் பங்கேற்க இருக்கின்றனர்.
இதையும் படிங்க : மெட்ரோவில் மேளதாளத்துடன் பயணம்...