ETV Bharat / bharat

இறுதி சுற்றுப்பாதையை வெற்றிகரமாக மாற்றியமைத்த இஸ்ரோ!

சந்திரயான் 2 விண்கலத்தின் ஐந்தாவது சுற்றுப்பாதையை இஸ்ரோ வெற்றிகரமாக மாற்றியமைத்தது.

chandrayaan 2
author img

By

Published : Sep 1, 2019, 7:23 PM IST

நிலவினுடைய தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தை, ஜூலை 22ஆம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனையடுத்து, சந்திராயன் 2 ஆகஸ்ட் 14ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்க்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது.

ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் முதல் சுற்றுப்பாதையை அடைந்த சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6.18 மணியளவில் நான்காவது சுற்றுப்பாதையை அடைந்தது. மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி நிலவிலிருந்து 100கி.மீ, தூரத்தில் உள்ள இறுதி மற்றும் ஐந்தாவது சுற்றுப்பாதையில் சந்திரயான் 2 விண்கலம் மாற்றியமைக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்தது. அதன்படி, விண்கலத்தை இன்று மாலை 6.21 மணியளவில், ஐந்தாவது சுற்றுப் பாதையில் இஸ்ரோ வெற்றிகரமாக மாற்றியமைத்தது.

Intro:Body:

Indian Space Research Organisation (ISRO): The final and fifth Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today at 1821 hours IST (India Standard Time).

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.