இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், ராக்கெட்டில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டத்தை இஸ்ரோ தற்காலிகமாக கைவிட்டது.
பின்னர், ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலவின் தரையிலிருந்து 2 கி.மீ. தொலை தூரத்திலிருந்த விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ அமைப்பு, "இதுவரை சந்திரயான்-2 விண்கலம் மேற்கொண்ட பணிகளின் 90-95 விழுக்காடு நோக்கங்களை அடைந்துள்ளது. இந்த விண்கலம் அறிவியலுக்கு தொடர்ந்து பங்களிக்கும்" என கூறியுள்ளது.