ETV Bharat / bharat

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனுக்கு வலை விரிக்கிறதா பாஜக? - எச்சரிக்கும் அரசியல் தலைவர்!

author img

By

Published : Dec 25, 2019, 11:03 AM IST

Updated : Dec 25, 2019, 11:25 AM IST

டெல்லி: தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) என்ற போர்வை மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) மத்திய அரசு செயல்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் எச்சரித்துள்ளார்.

Centre Starting NRC In the Grab of NPR, says Congress leader Ajay Maken

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்த மசோதாவை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த வேளையில், மற்றொரு விவகாரமும் பூதாகரமாக எழ தொடங்கியுள்ளது. அண்மையில் அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு (என்.ஆர்.சி.) விவகாரம்தான் அது. அசாமில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின்படி 19 லட்சம் பேர் தங்களது குடியுரிமையை இழந்தனர்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மத்திய அரசு என்.ஆர்.சி.யை அமல்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைச் செயல்படுத்துவதற்கு முன் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்காக (என்.பி.ஆர்.) வீடுவீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து, அதன்மூலம் தேசிய குடியுரிமை பதிவேட்டை நடைமுறைப்படுத்தப்படும் என்ற செய்தியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியை உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட சில அமைச்சர்கள் மறுத்து வந்தாலும் இது வெறும் வதந்தி அல்ல உண்மைதான் என்கிறார் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்துவதற்கான முதல் படி என்.பி.ஆர்.யை நடைமுறைப்படுத்துவது என்று உள்துறை அமைச்சகத்தின் 2018-19ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சிக்கு வந்தபோதே தெளிவாகக் கூறிவிட்டார்கள். முதலில் அவர்கள் என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கூறினார்கள். இப்போது என்.பி.ஆர். என்ற போர்வையின் மூலம் என்.ஆர்.சி.யை அமல்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்” என்றார்.

முன்னதாக, அமித் ஷா என்.ஆர்.சி.க்கும் என்.பி.ஆர்.க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அஜய் மக்கான், ”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளார்கள் என்பதால், இப்போது அமித் ஷா மிகப் பெரிய பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். கண்டிப்பாக பாஜக அரசு என்.ஆர்.சி.யை அமல்படுத்தி அடித்தட்டு மக்களின் குடியுரிமையைப் பறிக்காமல்விடாது.

2011ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தியிருந்தாலும், அதைக் கொண்டு என்.ஆர்.சி.யை அமல்படுத்த நாங்கள் முன்னெடுக்கவில்லை. என்.பி.ஆர். என்பது மக்கள் குடியிருக்கும் இடங்களைப் பொறுத்தே கணக்கெடுக்கப்படும். அது குடியுரிமையை நிரூபிக்கும் கணக்கெடுப்பு அல்ல. ஆனால், பாஜக இரண்டையும் இணைத்து கணக்கெடுப்பு நடத்தி அரசியலமைப்பையும் மக்களின் உரிமையையும் பறிக்க திட்டமிடுகிறது” என்று கூறியுள்ளார்.

இத்தகைய அசாதாரண சூழலில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டைப் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காஷ்மீரிலிருந்து 7,000 வீரர்களை வாபஸ் வாங்கிய உள்துறை!

Intro:Body:

Centre Starting NRC In the Grab of NPR, says Congress leader Ajay Maken 

Conclusion:
Last Updated : Dec 25, 2019, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.