ETV Bharat / bharat

கரோனா நிவாரண நிதியிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ. 620 கோடி ஒதுக்கீடு

author img

By

Published : Jun 27, 2020, 12:01 PM IST

டெல்லி: கரோனா நிவாரண நிதியிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ. 620 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை விரைவில் அதிகப்படுத்தப்படவுள்ளதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

VK Yadav
VK Yadav

நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக ரயில் பெட்டிகள் கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வழியே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ், "கரோனா நிவாரண நிதியிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ. 620 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மாற்றப்பட்டுள்ள ரயில் பெட்டிகளைப் பரமாரிப்பது, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது என ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதுவரை 5,213 ரயில் பெட்டிகளை இவ்வாறு சிகிச்சை அளிக்க ஏதுவான பெட்டிகளாக மாற்றியுள்ளோம்" என்றார்.

தற்போது இயக்கப்பட்டுவரும் சிறப்பு ரயில்கள் குறித்துப் பேசிய அவர், "தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 78 ரயில்களின் இருக்கைகள் 100 விழுக்காடு நிரம்பிவிடுகின்றன. உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீண்டும் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு வேலைக்காகத் திரும்புகின்றனர்.

இப்போதுள்ள சூழ்நிலையில் ரயில்களை மீண்டும் முழுவதுமாக இயக்குவது என்பது பொருத்தமானதாக இருக்காது. சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம். விரைவில் கரோனா பரவல், தேவை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவோம்.

பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களுக்குத் திரும்பியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள் வேலை செய்ய ஏதுவான 160 ரயில்வே கட்டுமான பணிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 160 பணிகளை முடிக்க 8,828 தொழிலாளர்களும் 8,65,675 மனித உழைப்பு நாள்களும் தேவைப்படும்.

அதன்படி, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஜூன் 20ஆம் தேதி முதல் 125 நாள்கள் இந்த பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள். இந்தத் திட்டம் ரூ. 1,888 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'ஆம்! சமூகப் பரவல்தான், அதனை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்' - கோவா முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.