ETV Bharat / bharat

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு மறுப்பு - நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படுமா? - விவசாய சங்க பிரதிநிதிகள்

டெல்லி: விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை
author img

By

Published : Dec 6, 2020, 1:14 PM IST

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். அடுத்தகட்டமாக நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன. இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றது.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களில் விவசாயிகளின் குறைகளைக் கருத்தில்கொண்டு திருத்தம் மேற்கொள்ள வழிவகைச் செய்யப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்ததால், எந்தவித முன்னேற்றமுமின்றி பேச்சுவார்த்தை முடிந்தது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில், விவசாயிகளின் பிரச்சினையை விவாதிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் எனக் காங்கிரஸ் கோரிக்கைவிடுத்திருந்தது. இது குறித்து மூத்த உயர்மட்ட அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், "சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை" என்றார்.

விவசாய பொருள்களைச் சந்தையில் விற்கும் முறையை இந்தப் புதிய சட்டங்கள் அழித்துவிடும் என விவசாயிகள் அச்சம் கொள்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டுவந்து விடும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.