கடந்த 15ஆம் தேதி மத்தி உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ராஜஸ்தான், மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் ஏற்பட்டுவரும் பயிர்ச்சேதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய உள் துறை அமைச்சகம் மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.111.70 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இவை முறையே, பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு 68.65 கோடி ரூபாயும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு 26.53 கோடி ரூபாயும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்திற்கு 16.52 கோடி ரூபாயும் அளிக்கப்படவுள்ளது.
இந்தத்தொகை நடைமுறை விதிகளின்படி, தேசிய பேரிடர் நிதியிலிருந்து 50 விழுக்காடும், மாநில பேரிடர் நிதியிலிருந்து 50 விழுக்காடும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையினை மாநில அரசுகளுக்கு விரைவில் அளிக்குமாறும் உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோடையிலும் வாடிய மண்பாண்டத் தொழில்!