பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியான 'ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்' என்ற துணைத் திட்டத்தினை மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் சொட்டு நீர் பாசன முறைகளில் கவனம் செலுத்துகிறது. சொட்டு நீர் பாசன முறையான தண்ணீரை சிக்கனமாக்குவதோடு உர பயன்பாடு, தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகளைக் குறைக்கிறது.
இத்திட்டத்திற்காக மாநில அரசுகளுக்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சில மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
சொட்டு நீர் பாசனத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.478.79 கோடியை ஒதுக்கியுள்ளதாக கூறும் மத்திய அரசு, இதன் மூலம் தமிழ்நாட்டில் 1.76 லட்சம் ஹெக்டேர் நிலம் பயன்பெறும் என்று தெரிவித்துள்ளது.