கரோனா வைரஸ் தொற்றினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து பொருளாதாரத்தை மீட்க 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல், பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டு எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
இது தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் செயல் என பல கட்சிகள், தொழிற்சங்கங்கள் விமர்சித்தன. இந்நிலையில், மத்திய தொழிற்சங்கங்கள் மே 22ஆம் தேதி நாடு முழுவதும் இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிற்சங்கமும் வேலை நேர மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைந்துள்ளது.
வேலை நேரத்தை எட்டுமணி நேரமாக மாற்ற வேண்டும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசு மட்டும் அதனையேற்று தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணி நேரமாக மீண்டும் மாற்றியுள்ளது.
மே 22ஆம் தேதி நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறப் போராட்டம் குறித்து நமது ஈடிவி பாரத்துடன் பேசிய அகில இந்திய கிஷான் சபை அமைப்பின் பொதுச்செயலாளர், "இது முக்கியமான விஷயம். இந்தத் திருத்தத்திற்கு எதிராக சமூகவலைதளங்களில் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக வராது.
ஆகையால் 22ஆம் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். கரோனா தொற்றால் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் பங்குபெற முடியாது. குறைந்த அளவில் அனைத்துமட்டத் தொழிலாளர்கள் பங்கு பெற்று இப்போராட்டத்தை நடத்தவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்கள் ஒரு மோசடி' - சீத்தாராம் யெச்சூரி