கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நாகராஜ் ஷெட்டி என்பவரது வீட்டில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சட்டவிரோதமாக பணம் கடன் வழங்கல் புகாரின் அடிப்படையில் அவரை வியாலிக்காவல் என்னுமிடத்தில் கைதுசெய்தனர்.
நாகராஜ் அளவுக்கதிகமாக வட்டிவசூல் செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நாகராஜ் வீட்டில் நடத்திய சோதனையின்போது 164 காசோலைகள், 84 கட்டாயப்படுத்தப்பட்டு பெற்ற உறுதிமொழி குறிப்புகள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், 22 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், "மத்திய குற்றப்பிரிவினர் குற்றஞ்சாட்டப்பட்ட நாகராஜ் ஷெட்டி வீட்டில் மேற்கொண்ட அதிரடி சோதனைக்குப்பின் அவர் கைதுசெய்யப்பட்டார்.
சோதனையின்போது, 164 காசோலைகள், 84 கட்டாயப்படுத்தப்பட்டு பெற்ற உறுதிமொழி குறிப்புகள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.
அதேபோல், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கிய 22 லட்சம் ரூபாயும் மீட்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.