விலங்குகள் நல ஆர்வலரான மேனகா காந்தி ட்விட்டரில் காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “பூனைகள் கரோனா வைரஸ் தொற்றினை பரப்பாது என தெரிவித்துள்ளார். மேலும் பூனை ஒருபோதும் புலி ஆகாது. அதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. உங்கள் பூனைகள் பூரண பாதுகாப்பானவை” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வன உயிரியல் பூங்காவிலுள்ள புலிக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உலகிலுள்ள அனைத்து வன விலங்கு சரணாலயத்திலும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளும் கரோனா பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று வதந்திகள் வெளியானது நினைவுக் கூரத்தக்கது.
- — Maneka Sanjay Gandhi (@Manekagandhibjp) April 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Maneka Sanjay Gandhi (@Manekagandhibjp) April 7, 2020
">— Maneka Sanjay Gandhi (@Manekagandhibjp) April 7, 2020
உலகம் முழுக்க கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்து விட்டது. உயிரிழப்பு 70 ஆயிரத்தை தொட்டுவிட்டது. இந்தியாவில் கரோனா பாதிப்பு ஐந்தாயிரத்தை தாண்டிவிட்டது.