புதுச்சேரி மாநிலம், முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது குடும்பத்தினர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை முத்துக்குமரன் தனது காரை ஸ்டார்ட் செய்துள்ளார்.
அப்போது திடீரென காரில் தீப்பற்றி எரிந்துள்ளது. கார் கதவுகள் லாக் ஆகியிருந்த நிலையில் முத்துக்குமரனால் வெளிவரமுடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் கார் வெடித்து சிதறியது. இதில் முத்துக்குமரன் காருக்குள்ளேயே எரிந்து சாம்பலானார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர். உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். பின்னர், காரை உடைத்து முத்துக்குமரனின் உடலை மீட்டனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஏசி மின் கசிவின் காரணமாக இந்த கார் வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : பெட்ரோல் பங்க் அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்